இந்திய கிரிக்கெட் அணி இலங்கை பயணம்

திங்கள், 18 ஜூன் 2012 (15:30 IST)
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஜூலை மாதம் இலங்கை செல்கிறது. இந்திய அணி இலங்கையுடன் 5 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. ஜூலை 22-ந்தேதி இந்த போட்டித்தொடர் தொடங்குகிறது.

அதன்பிறகு இந்திய அணி உள்ளூரில் நியூசிலாந்துடன் ஆகஸ்ட்-செப்டம்பரில் 2 டெஸ்ட் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டியில் ஆடுகிறது.

பின்னர் செப்டம்பர் 18-ந்தேதி முதல் அக்டோபர் 7-ந்தேதி வரை இலங்கையில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பையில் விளையாடுகிறது.

இந்திய அணி கடைசியாக ஆசிய கோப்பையில் விளையாடியது. இதில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

அதன்பிறகு இந்திய வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் ஆடினார்கள். நீண்ட ஓய்வுக்கு பிறகு இந்திய வீரர்கள் அடுத்த மாதம் இலங்கையுடன் விளையாடுகிறார்கள்.

இந்தியா- இலங்கை இடையேயான போட்டி விவரம்:-

ஜூலை.22: முதல் ஒருநாள் போட்டி

ஜூலை24: 2-வது ஒருநாள் போட்டி

ஜூலை28: 3-வது ஒருநாள் போட்டி

ஜூலை31: 4-வது ஒருநாள் போட்டி

ஆக4: கடைசி ஒருநாள் போட்டி

முதல் 20 ஓவர் போட்டி ஆகஸ்ட் 7-ந்தேதி நடக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்