அதிவேக ஒருநாள் சதம்! அப்ரீடி சாதனையை முறியடித்தார் நியுசீ.வீரர் கோரி ஆண்டர்சன்!

புதன், 1 ஜனவரி 2014 (11:02 IST)
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 37 பந்துகளில் சதன் அடித்து 18 ஆண்டுகளாக உலக சாதனையை வைத்திருந்தார் பாகிஸ்தானின் ஷாகித் அப்ரீடி. அதனை புத்தாண்டு முதல்தினமாகிய இன்று நியூசீலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் முறியடித்தார்.
FILE

36 பந்துகளில் சதம் கண்ட கோரி ஆண்டர்சன் 47 பந்துகளில் 131 ரன்கள் எடுத்து நாட் அவுட்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்றுவரும்...

3வது ஒருநாள் போட்டியில் கோரி ஆண்டர்சன் மேற்கிந்திய அணியின் பந்து வீச்சை புரட்டி எடுத்தார். 36 பந்துகளில் சதம் கண்டு அப்ரீடி சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
FILE

அப்ரீடி 16 வதில் அடித்ததாக் கூறப்படும் அந்த ஒருநாள் சதம் 1996ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக அடிக்கப்பட்டது. இன்று அதனை முறியடித்த கோரி ஆண்டர்சன் சதத்தோடு நிற்காமல் 47 பந்துகளில் 131 ரன்கள் விளாசி அதில் சாதனையான 14 சிக்சர்களையும் 6பவுண்டரிகளையும் அடித்துள்ளார் கோரி ஆண்டர்சன்.

ஆனால்...

நல்லவேளையாக ரோகித் சர்மா ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக அடித்த 16 சிக்சர்கள் உலக சாதனை முறியடிக்கப்படவில்லை.
FILE

முதலில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு வந்த ஜெசி ரைடர் 51 பந்துகளில் 5 சிக்சர் 12 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் எடுத்தார். 21 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இந்த ஒருநாள் போட்டியில் நியூசீலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு யாரும் சாதிக்க முடியாத 283 ரன்களை விளாசியுள்ளது.

கோரி ஆண்டர்சனுக்கும் ஷாகித் அப்ரீடிக்கும் உள்ள ஒரு முதன்மை வித்தியாசம் கோரி ஆண்டர்சன் இடது கை பேட்ஸ்மென்.

இந்த மாதம் இந்தியா நியூசீலாந்து செல்லும் நிலையில் கோரி ஆண்டர்சன் கவனிக்கத்தக்க ஒரு வீரராக இப்போது முளைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்