ஹர்பஜன் சிங் 400 விக்கெட்டுகள்

வெள்ளி, 8 ஜூலை 2011 (12:11 IST)
FILE
மேற்கிந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி டொமினிகா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாம் நாளான நேற்று மேற்கிந்திய விக்கெட் கீப்பர் கால்டன் பாஹ் விக்கெட்டை பவுல்டு செய்து இந்தியாவின் ஹர்பஜன் சிங் 400வது விக்கெட்டைக் கைப்பற்றினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 400வது விக்கெட்டைக் கைப்பற்றிய 3வது இந்திய வீரர் ஆவார் ஹர்பஜன் சிங்.

முன்னதாக கபில்தேவ் 434 விக்கெட்டுகளையும் அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்கள்.

"கடைசி 7 விக்கெட்டுகளுக்கு நான் கடினமாக உழைக்க நேரிட்டது இருப்பினும் அடுத்த 200 விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்துவேன் என்று நம்புகிறேன் என்று கூறினார் ஹர்பஜன் சிங்.

9 பந்துகள் இடைவெளியில் டேரன் சம்மி விக்கெட்டையும் கார்ல்டன் பாஹ் விக்கெட்டையும் ஹர்பஜன் வீழ்த்தினார்.

"ஷேன் வார்ன், முத்தையா முரளிதரன், அனில் கும்பிளே ஆகியோரும் 30வயதுக்கு மேல்தான் விறுவிறுவென்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். எனக்கு வயது 31, காலம் என் பக்கம் உள்ளது. நான் இன்னும் இளம் வயதுதான் இன்னும் நிறைய விக்கெட்டுகள் என்னிடம் உள்ளது.

இன்றைய கால கிரிக்கெட்டில் பேட்ஸ்மென்கள் ஷாட்களை ஆடுகின்றனர். பந்து வீச்சாளர்களின் சராசரி 25, 26 என்று இருந்த காலங்கள் எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் இன்று 30 ரன்கள் சராசரி என்பது பந்து வீச்சாளர்களுக்கு சகஜமாகிவிட்டது.

அனில் கும்ளே மீது எனக்கு அதிக மரியாதை உண்டு.அவர்தான் அயல்நாடுகளில் நாம் டெஸ்ட் போட்டிகளில் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்தார். இலங்கை தொடரின் போது அணி கூட்டத்தில் அவர் கூறினார் இன்னும் 2 ஆண்டுகளில் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 என்றார் சரியாக 2 ஆண்டுகளில் இப்போது நாம் நம்பர் 1-இல் இருக்கிறோம்.

அவர் இல்ல்லாவிட்டால் நான் இல்லை. எனக்கு உதவி தேவையென்றால் அவரிடம்தான் செல்வேன்.

என் பந்து வீச்சில் சிறந்த அருகமைப்பு ஃபீல்டர்கள் என்றா ஷிவ் சுந்தர் தாஸ், சடகோபன் ரமேஷ் அவர் நிறைய தூங்குவார் ஆனாலும் ஒருமுறை அவர் அபார கேட்சை பிடித்ததால் நான் ஷேன் வார்னை வீழ்த்தி ஹேட்ரிக் சாதனை புரிந்தேன். ஆகாஷ் சோப்ராதான் ஆகச்சிறந்த அருகமைப்பு ஃபீல்டர், புஜாரா தென் ஆப்பிரிக்காவில் அபாரமாக பேட்டிற்கு அருகில் நின்று ஃபீல்ட் செய்தார்.

ராகுல் திராவிட் எனது பந்து வீச்சில் மட்டும் இது வரை 50 கேட்ச்களை எடுத்துள்ளார். நான் ஆக்ரோஷமான கிரிக்கெட் வீரன், களத்தில் நட்புமுறை எனக்கு பிடிக்காது, எனது வெற்றியில் ஆக்ரோஷமே அதிகம் சாத்தித்துள்ளது எனவே அதனை முடிந்தவரை காப்பாற்றுவேன்.

இவ்வாறு கூறியுள்ளார் ஹர்பஜன் சிங்.

வெப்துனியாவைப் படிக்கவும்