நயன்தாரவை புறக்கணித்து வெளியான இது நம்ம ஆளு பட ஸ்டில்கள்

வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (03:00 IST)
நடிகர் சிம்பு, நடித்துள்ள இது நம்ம ஆளு பட விவகாரங்களில் நடிகை  நயன்தாரா ஒரங்கட்டப்படுவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அதை சமீபத்தில் வெளியான புகைப்படங்கள் நிரூபித்துள்ளது.


 

 
பீப் ஸ்டார் சிம்பு நடித்து, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய படம்  ‘இது நம்ம ஆளு’. ஆனால் பல காரணங்களால் இந்தப்படம் இதுவரை வெளியாகவில்லை. ஒரு பாடல் எடுக்க வேண்டியிருப்பதாகவும், அதற்கு நயன்தாரா கால்ஷீட் கொடுக்கவில்லை என்று சிம்பு தரப்பில் கூறப்பட்டது. 
 
ஆனால் நயன்தாரா கொடுத்த கால்ஷீட் வீணடிக்கப்பட்டது. அதற்கு சிம்புதான் காரணம் என இயக்குனர் பாண்டிராஜ் கூறியிருந்தார். அதோடு அப்படத்தின் தயாரிப்பாளரான டி.ராஜேந்தர் தனக்கு இன்னும் சம்பளம் கூட கொடுக்கவில்லை என்றெல்லாம் பத்த வைத்தார் பாண்டிராஜ்.
 
ஒருவழியாக அப்படம் விரைவில் வெளிவரும் என்ற தகவல் வெளியானது. மேலும் அப்படத்தின் ட்ரெய்லரும் சமீபத்தில் வெளியானது. 
 
இந்நிலையில், அப்படத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. ஆனால் அதில் ஒரு புகைப்படத்தில் கூட நயன்தாரா இல்லை. இந்த படத்தில் இன்னோரு கதாநாயகியாக நடிக்கும் ஆண்ட்ரியாவே எல்லா புகைப்படங்களிலும் இருக்கிறார். 
 
மீதமுள்ள ஒரு பாடலை எடுக்க நயன் கால்ஷீட் தராமல் இருப்பதால், அவரை சிம்பு ஓரங்கட்டியுள்ளார் என்ற பேச்சு கோடம்பாக்கத்தில் அடிபடுகிறது.
 
அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...




மேலும் அடுத்த பக்கம் பார்க்க
 



மேலும் அடுத்த பக்கம் பார்க்க..
 



மேலும் அடுத்த பக்கம் பார்க்க..
 




மேலும் அடுத்த பக்கம் பார்க்க..
 



 
மேலும் அடுத்த பக்கம் பார்க்க..
 

வெப்துனியாவைப் படிக்கவும்