ஜி.வி.பிரகாஷ், திவ்யா நடிப்பில் பென்சில் திரைப்படக் காட்சிகள்

செவ்வாய், 28 அக்டோபர் 2014 (17:04 IST)
இசையமைப்பாளராக இருந்த ஜீ.வி.பிரகாஷ். நடிகராக ஒப்பந்தமான முதல் படம். பென்சில். ஸ்ரீதிவ்யா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படம், வேகமாக வளர்ந்து வருகிறது. இரண்டு பாடல் காட்சிகளை எடுப்பதற்காக, ஜீ.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பென்சில் படக் குழு, டோக்கியோ கிளம்பிச் சென்றுள்ளது.

இந்த இரண்டு பாடல்களையும் தாமரை எழுதியுள்ளார். கண்களிலே கண்களிலே கடுகளவு தெரிகிறதே.. எனத் தொடங்கும் பாடலையும், யாரைப் போலும் இல்லா நீயும் எல்லோர் போலும் உள்ள நானும் எனத் தொடங்கும் பாடலையும் ஜப்பானின் பிரபலமான இடங்களில் படமாக்க உள்ளனர். அதற்காக படக் குழு தற்போது ஜப்பானில் முகாமிட்டுள்ளது.

பென்சில் படத்தின் சுவாரசியமான சில காட்சிகள் இங்கே:


வெப்துனியாவைப் படிக்கவும்