மரணத்தை வென்ற இயேசு கிறிஸ்து!
வியாழன், 20 மார்ச் 2008 (15:28 IST)
இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். கி.பி. 29ஆம் ஆண்டிலிருந்து ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுவதாக வரலாறு கூறுகிறது. எனினும் கி.பி. 325இல் அப்போதைய ரோம சாம்ராஜ்யத்தை ஆண்ட மாமன்னர் கான்ஸ்டைன் காலத்தில் இருந்துதான் ஈஸ்டர் பிரபலமானதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஈஸ்டர் பண்டிகையை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதை விளக்கி தனியாக சட்டமும் பிறப்பிக்கப்பட்டது. ரோம இதிகாசங்களில் ஈஸ்டர் என்ற பெண் கடவுள் விடியலுக்கான தேவதையாக சித்தரிக்கப்படுகிறார். இந்த தேவதையின் பெயர்தான் ஈஸ்டர் பண்டிகைக்கு சூட்டப்பட்டதாக மொழியாளர்கள் கூறுகின்றனர். ஈஸ்டர் என்ற வார்த்தைக்கு 'வசந்த காலம ்' என்ற அர்த்தமும் உண்டு. இயேசுவின் உயிர்த்தெழுதலை குறிக்கும ் ஈஸ்டர் பற்றி விரிவாக அறிய கிறிஸ்துவத்தின் அடிப்படை தத்துவங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். உலகையும் அதன் சகல ஜீவராசிகளையும் சிருஷ்டித்த தேவாதி தேவன் தன்னுடைய சாயலாக ஆதாமையும ், ஏவாளையும் உருவாக்கினார். ஏதேன் தோட்டத்தில் அவர்களோடு உலாவித் திரிந்தார். ஆனால் ஏமாளி ஏவாள் சாத்தான் சூழ்ச்சியில் எளிதாக வீழ்ந்தார். ஏவாழுக்காக ஆதாமும் பாவத்தில் விழுந்தார். உலகின் மீட்பிற்காக அனுப்பி வைத்தார ்! தன்னுடைய சாயலாக ஆச ை, ஆசையாக படைத்த மனிதன ், பாவத்திற்கு ஆட்பட்டதால் அவர்கள் இருவருக்கும் சில தண்டனைகளை விதித்து தன்னுடைய பரிசுத்த சமூகத்திலிருந்து துரத்தி விட்டார் தேவன். அதன ் பின் ஆதாமும ், ஏவாளும் ஆணும ், பெண்ணுமாக ஏராளமான பிள்ளைகளை பெற்றார்கள். மனித குலம் பல்கிப் பெருகி கடற்கரை மணல் போல் பன்மங்கானது. அதைவிட வேகமாக பாவம் பல்கிப் பெருகியது. பாவத்தின் சாபத்தால் மனிதர்கள் மூப்படைந்து மறித்தார்கள். அவர்களின் ஆத்மாக்கள் வீணாய் அழிந்தன. ஆதாமும ், ஏவாளும் தன்னை விட்டு விலகினாலும் மனிதகுலத்தின் மீது இறைவன் கருணையுடனே இருந்தார். நோவ ா, ஆபிரகாம் என சில நல்ல மனிதர்கள் இறைவனின் சொல்படி நடந்தார்கள். அவர்களை ஆண்டவர் ஆசீர்வதித்தார். ஆனால் பெரும்பான்மை மக்கள் பாவத்திற்குள் சிறைப்பட்டு செத்து மடிந்தார்கள். அவர்களுக்காக பரிதவித்த பரம பிதா தம்முடைய ஒரே பேரான குமாரனை உலகின் மீட்பிற்காக மண்ணுலகிற்கு அனுப்பி வைத்தார். அவர்தான் இயேசு கிறிஸ்து. உலகை உய்விக்க ரட்சகராய் அவதரித்த இயேசு கிறிஸ்து, ஏழை தச்சரான ஜோசப்- மரியாள் தம்பதியரின் மகனாகப் பிறந்தார். 30 வயது வரை பெற்றோருக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தார். அதன் பின் உலக மீட்பிற்கான இறைவனின் திட்டத்தை மக்களுக்கு விளக்கி போதனை செய்தார். 3 ஆண்டுகள் இரவும் பகலும் இடைவிடாது மக்களைச் சந்தித்து அவர்களுக்கு நல்வழிகளை போதித்தார்.
சப்பாண ி, குருடன ், குஷ்டரோகிகள் என ஏராளமான நோயாளிகளை இறையருளால் சுகமாக்கினார். கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்ட லாசர் என்பவரை உயிரோடு எழுப்பினார். வேதாகமத்தை வாசித்தால் அவர் செய்த அற்புதங்கள ், அதிசயங்களை இன்னும் விரிவாய் அறிந்து கொள்ளலாம். இயேசு உடலில் 5,466 காயங்கள ்! மரித்தோரை உயிர்பித்து தான் தேவகுமாரன் என்பதை நிரூபித்த இயேசுவை அப்போதைய யூத மதத் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு பாவமும் செய்யாத அவர் மீது குற்றம் சுமத்தி சிலுவையில் அறைந்து கொடூரமாக கொலை செய்தனர். அவர் சிலுவைப்பாடுகளை அனுபவித்த போது அவர் உடல் முழுவதும் கிட்டத்தட்ட 5,466 விழுப்புண்கள் இருந்ததாக கூறப்படுகிறது. சிலுவையில் மரித்த இயேசு 3ஆம் நாளில் உயிர்த்தெழுந்தார். மனிதனாகப் பிறந்து உயிரோடு எழும்பிய ஒரே நபர் அவர் மட்டுமே. இந்த நேரத்தில் சாமானிய மனிதர்கள் மனதில் ஒரு கேள்வி எழும ். இறைவன் ஏன் 3 நாள்கள் கழித்து உயிரோடு எழும்ப வேண்டும். உயிர் நீத்த அதே நொடியில் மீண்டும் உயிர்த்தெழக் கூடாதா என்பதே அது. இந்தக் கேள்வி பலரின் விசுவாசத்தை அலைக்கழிக்கிறது. ஆதியாகமத்தில் முதல் அத்தியாயத்தை படித்தால் 6 நாட்களில் தேவன் உலகத்தையும் அதன் சகல ஜீவராசிகளையும் படைத்தார் என்பதை அறிய முடியும். ஆனால் கோடிக்கணக்கான ஆண்டுகள் உருண்டோடிதான் உலகம் உண்டானதாக விஞ்ஞானிகள் உறுதிப்பட கூறுகின்றனர். இதனால் அறிவியலுக்கும் கிறிஸ்தவ மத நம்பிக்கைக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி இருப்பதாக தோன்றும். உண்மை அப்படியல்ல. அன்பை ருசித்து பார ்! இறைவனின் கால நேர கணக்குப்படி பல கோடி ஆண்டுகள் அவருக்கு ஒரு நாள் போல் இருக்கலாம். அவருடைய கணக்குப்படி இயேசு கிறிஸ்து இறந்த அதே நொடியில் உயிர்தெழ செய்திருப்பார ். ஆனால் நம்முடைய கா ல, நேர கணக்குப்படி 3 நாள்கள் போல் தோன்றுகிறது. நாம் மனித மூளையின் சக்திக்கு தகுந்தாற்போல் சிந்திக்கிறோம். தேவனுடைய அறிவை அறிந்து கொள்ளும் அளவிற்கு நமக்கு ஞானம் போதாத ு. மனித குலத்திற்கு மீட்பிற்காக மரித்து உயிர்ந்தெழுந்த இயேசு இன்றும் உயிரோடு ஜீவிக்கிறார். தம்மை நோக்கி உண்மையோடு வேண்டுபவர்களுக்கு பாவ மன்னிப்பை அருள ி, பரலோகத்தில் அவர்களுக்கும் ஓரிடத்தை உறுதி செய்து கொடுக்கிறார். அவருக்கு பிரியமாய் பரிசுத்தமாக வாழ வேண்டும் என்று மட்டுமே விரும்புகிறார். ஆனால் மனிதர்கள் உலகத்தின் இச்சைகளால் இழுப்புண்டு பாவசேற்றில் சிக்கி அமிழ்ந்து போகிறார்கள். ஒரே ஒரு முறை இயேசு கிறிஸ்துவின் புனிதமான அன்பை அனுபவித்தவர்கள் அவருடைய அருளின் வல்லமையையும், ஈடிணையற்ற கருணையையும் அறிந்து கொள்ள முடியும். இந்த ஈஸ்டர் திருநாளிலாவது மனிதர்கள் இறைவனை நோக்கி தங்கள் மனதைத் திருப்பி பரலோகப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கிறார்.
செயலியில் பார்க்க x