ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் ஒன்றாய் விளைந்தது. அப்பொழுது அவன், "நான் என்ன செய்வேன்? என் தானியங்களை சேர்த்து வைப்பதற்கு இடமில்லையே.. நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து பெரிதாகக் கட்டி எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்து வைப்பேன்" என்றான்.
பின்பு : "அத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. நீ இளைப்பாறி புசித்து, குடித்து, பூரிப்பாக இரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன்" என்று தனக்குள்ளே சிந்தித்து சொல்லிக் கொண்டான்.
webdunia photo
WD
தேவனோ அவனை நோக்கி : "மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்தில் இருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும்" என்றார்.
நாம் பொருளாசையினால் நிறைந்தவர்களாய் தேவனை மறந்து, நம்மை நம்பி வருபவர்களுக்கு உதவி செய்யாமல், ஏழை எளிய மக்களிடம் இரக்கத்தை காண்பிக்காமல், நம்முடைய பொருள்களினால் அவர்களுக்கு உதவி செய்யாமல் வாழ்வதை சற்று மாற்றி, எல்லாக் காரியத்திலும் தேவனுக்கு முன்னுரிமை கொடுத்து, நம்மிடம் உதவியை எதிர்பார்க்கிறவர்களுக்கு ஏற்ற நேரத்தில் செய்யத்தக்க உதவிகளை செய்து பொருளாசை நம்மை ஆண்டு கொள்ளாமல் நம்மை நாமே நிதானித்து நிம்மதியாக வாழ்வோம்.