இயேசு‌வி‌ன் மரண‌ பாடுக‌ள்!

புதன், 21 மே 2008 (12:28 IST)
புனித விவிலியத்தின் படி, இயேசு விழாக் கோலத்தில் எருசலேமுக்குள் நுழைந்த பிறகு ஏரோதில் ஆலயத்தில் வியாபாரிகளை இது செப வீடு, கள்வர் குகையாய் மாற்றாதீர் எனக்கூறி அவர்களை விரட்டி விட்டா‌ர்.

குருத்தோலைகளைப் பிடித்துக் கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள். யோவா‌ன் 12: 13

அல்லாமலும்: சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக் குட்டியின் மேல் ஏறி வருகிறார் என்று எழுதியிருக்கிற பிரகாரமாக, யோவா‌ன் 12: 14

இயேசு ஒரு கழுதைக்குட்டியைக் கண்டு அதின் மேல் ஏறிப்போனார். யோவா‌ன் 12: 15

இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்திலே அறியவில்லை. இயேசு மகிமையடைந்த பின்பு, இப்படி அவரைக் குறித்து எழுதியிருக்கிறதையும், தாங்கள் இப்படி அவருக்குச் செய்ததையும் நினைவு கூர்ந்தார்கள். யோவா‌ன் 12: 16

அன்றியும், அவருடனே கூட இருந்த ஜனங்கள் அவர் லாசருவைக் கல்லறையிலிருந்து வெளியே வரவழைத்து, அவனை உயிரோடே எழுப்பினாரென்று சாட்சி கொடுத்தார்கள். (யோவா‌ன் 12: 17).

அதே கிழமையில் தனது கடைசி இராப்போசனத்தை தனது சீடருடன் உட்கொண்ட பிறகு ஜெபம் செய்வதற்காக கெத்சமணி தோட்டதுக்குப் போனார். தோட்டத்திலிருந்த போது, ஆசாரியர்களதும் தலைமை குரு கைப்பாசினதும் (பிறகு கூறப்பட்டுள்ளப்படி,

அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு: இவன் தேவதூஷணம் சொன்னான்; இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ, இவன் தூஷணத்தை இப்பொழுது கேட்டீர்களே. மத்தேயு 26:65

உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றார்கள். மத்தேயு 26:66

அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து: மத்தேயு 26:67

கட்டளைப்படி இயேசு நாத‌ர் ரோம போர் வீரர்களால் கைது செய்யப்பட்டார். இயேசுவின் புகழ் மக்களிடம் ஓங்கியிருந்தபடியால் இயேசுவின் கைது திட்டமிட்டு இரவில் மேற்கொள்ளப்பட்டது.

ஆகிலும் ஜனங்களுக்குள்ளே கலகம் உண்டாகாதபடிக்கு, பண்டிகையிலே அப்படிச் செய்யலாகாது என்றார்கள். (மாற்கு 14:2).

இயேசுவை கைது செய்ய வந்த கூட்டத்தோடு பன்னிரு சீடரில் ஒருவரான யூதாசும் வந்தான். யோவான் நற்செய்தியின்படி, யூதாஸ் முன் வந்து முத்தம் செய்து இயேசுவை அடையாளம் காட்டினான். இயேசுவை போர் வீரர் கைது செய்ய முயன்றபோது பன்னிரு சீடரின் இன்னொருவரான பேதுரு தனது பட்டயத்தை உருவி பிரதான குருவின் பணியாளது காதை வெட்டினார்.
அப்போது இயேசு கத்தியெடுத்தவன் அதிலே அழிவான் எனச் சொல்லி, பட்டயத்தை உறையிலே போடுமாறு பேதுரு‌விட‌ம் கூறினார். பின்பு லூக்கா நற்செய்தியின்படி

அ‌ப்பொழுது இயேசு : இ‌‌ம்ம‌ட்டி‌ல் ‌நிறு‌த்து‌ங்க‌ள் எ‌ன்று சொ‌ல்‌லி, அவனுடைய காதை‌த் தொ‌ட்டு, அவனை‌ச் சொ‌ஸ்த‌ப்படு‌த்‌தினா‌ர். (லூக்கா 22:51)
இயேசு அப்பணியாளது காதைத் தொட்டுச் சுகமாக்கினார். பின்பு இயேசுவை அவர்கள் கைது செய்தனர்.

இயேசுவின் சீடர் தலைமறைவாகினார்கள். இயேசுவை ஆசாரியர்களும் மூப்பர்களும் உள்ள சபைக்கு விசாரணைக்காக அன்றிரவே கொண்டு சென்றனர். பிரதான ஆசாரியரும், மூப்பர்களும் இயேசுவை விசாரித்து அவர் கடவுளின் மகனா? என வினவினார்கள். அதற்கு இயேசு, நீரே அவ்வாறு கூறினீர் என்றார்

அத‌ற்கு அவ‌ர்களெ‌ல்லா‌ரு‌ம்: அ‌ப்படியானா‌ல், ‌நீ தேவனுடைய குமாரனா எ‌ன்று கே‌ட்டா‌ர்க‌ள். அத‌ற்கு அவ‌ர் : ‌நீ‌ங்க‌ள் சொ‌ல்லு‌கிறபடியே நா‌ன் அவ‌ர் தா‌ன் எ‌ன்றா‌ர். லூக்கா 22:70.

அ‌ப்பொழுது அவ‌ர்க‌ள்: இ‌னி வேறு சா‌ட்‌சி நம‌க்கு வே‌ண்டுவதெ‌ன்ன? நாமே இவனுடைய வா‌யினாலே கே‌ட்டோமே எ‌ன்றா‌ர்க‌ள். லூக்கா 22:71

(இதை கேட்ட அச்சபையினர் இயேசு கடவுளை பழித்தார் என தீர்ப்பிட்டனர். பின்பு இயேசு யூதரின் கடவுள் என தம்மை கூறிக்கொண்டார் எனக்கூறி உரோமை ஆளுனரான போன்சியோ பிலாத்துவிடம் இயேசுவை கொண்டுச் சென்றனர்

இயேசு தேசா‌திப‌தி‌க்கு மு‌ன்பாக ‌நி‌ன்றா‌‌ர். தேசா‌திப‌தி அவரை நோ‌க்‌கி: ‌நீ யூதருடைய ராஜாவா எ‌ன்று கே‌ட்டா‌ன். அத‌ற்கு இயேசு :‌நீ‌ர் சொ‌ல்லு‌கிறபடிதா‌ன் எ‌ன்றா‌ர். (மத்தேயு 27:11)

பிலா‌த்து மறுபடியு‌ம் அவ‌ர்களை நோ‌க்‌கி: அ‌ப்படியானா‌ல், யூதருடைய ராஜாவெ‌ன்று ‌நீ‌ங்க‌ள் சொ‌ல்லு‌கிறவனை நா‌ன் எ‌ன்ன செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று கே‌ட்டா‌ன். (மாற்கு 15:12).

பிலாத்து தனது விசாரணைகளின் போது இயேசு குற்றமற்றவர் எனக்கண்டு பாஸ்கா பண்டிகையின் போது குற்றவாளி ஒருவரை விடுவிக்கும் வழக்கப்படி இயேசுவை விடுவிக்க முயன்றார். ஆனால் மக்கள் கூட்டம் பரப்பாஸ் என்ற வேறு ஒரு கைதியை விடுதலை செய்யுமாறும், இயேசுவை சிலுவையில் அறையுமாறும் கூச்சலிட்டனர். மக்களுக்கு பயந்த பிலாத்து, இதோ இம்மனிதரை உங்களுக்கு கொடுக்கிறேன் இவர் இரத்த பாவம் என‌க்கு இல்லை எனக்கூறி இயேசுவைச் சிலுவையில் அறைவதற்கான கட்டளையை கொடுத்தார். மேலும் ஒரு பாத்திரத்தில் நீர் கொண்டு தனது கையை கழுவி தனது பாவத்தை கழுவிக்கொண்டார்.


சிலுவையில் இயேசு அறைய‌ப்ப‌ட்டா‌ர்

பின்பு போர் வீரர் இயேசுவை கூட்டிச் சென்று வாரினால் அடித்து பின்னர் அவரைச் சிலுவையில் அறையுமுகமாக கொல்கத்தா என அழைக்கப்பட்ட மலைக்கு கூட்டிச் சென்றனர். இயேசு தனது சிலுவையை சுமந்து சென்றார். அங்கே இயேசுவை சிலுவையில் அறைந்து பிலாத்துவின் கட்டளைப்படி "நாசரேனாகிய இயேசு, யூதர்களின் அரசர்" என எழுதப்பட்ட பெயர் பலகையை அவர் தலைக்கு மேல் தொங்கவிட்டனர். மூன்று மணிநேரம் சிலுவையில் தொங்கிய இயேசு, "ஏலோய், ஏலோய் லாமா சபக்த்தானி" (என் ஆண்டவரே என் ஆண்டவரே ஏன் என்னை கைவிட்டீர்) எல்லாம் நிறைவேறிற்று எனக்கூறி உயிர்விட்டார்.

webdunia photoWD
நான்கு நற்செய்திகளின் படியும், இயேசு மாலையாவதற்கு முன்பே மரித்துவிட்டார். செல்வந்தனான அரிமத்தியாவைச் சேர்ந்த யோசேப்பு
ஓ‌ய்வு நாளு‌க்கு மு‌ந்‌‌தின நா‌ள் ஆய‌த்தநாளா‌கி‌யிரு‌ந்தபடியா‌ல், சா‌ய‌ங்காலமானபோது (மாற்கு 15:42)

கன‌ம்பொரு‌ந்‌திய, ஆலாசைன‌க்காரனுமா‌கிய அ‌ரிம‌த்‌தியா ஊரானு‌ம் தேவனுடைய ரா‌ஜ்ய‌ம் வர‌க் கா‌த்‌திரு‌ந்தவனுமா‌கிய யோசே‌ப்பு எ‌ன்பவ‌ன் வ‌ந்து, ‌பிலா‌த்து‌வி‌னிட‌த்‌தி‌ல் து‌ணி‌ந்து போ‌ய், இயே‌சு‌வி‌ன் ச‌ரீர‌த்தை‌க் கே‌ட்டா‌ன். (மாற்கு 15:43)

இவ‌ர் இ‌த்தனை ‌சீ‌க்‌கிர‌த்‌தி‌ல் ம‌ரி‌த்து‌ப்போனாரா எ‌ன்று ‌பிலா‌த்து ஆ‌ச்ச‌ரிய‌ப்ப‌ட்டு, நூ‌ற்று‌க்கு அ‌திப‌தியை அழை‌ப்‌பி‌த்து: இவ‌ர் இத‌ற்கு‌ள்ளே ம‌ரி‌த்தது ‌நி‌ச்சயமா எ‌ன்று கே‌ட்டா‌ன். (மாற்கு 15:44)

நூ‌ற்று‌க்கு அ‌திப‌தி‌யினாலே அதை அ‌றி‌ந்து கொ‌ண்ட ‌பி‌ன்பு, ச‌ரீர‌த்தை யோசே‌ப்‌பி‌னிட‌த்‌தி‌ல் கொடு‌த்தா‌ன். (மாற்கு 15:45)

அவ‌ன் போ‌ய், மெ‌ல்‌லிய து‌ப்ப‌ட்டியை வா‌ங்க‌ி‌க் கொ‌ண்டு வ‌ந்து, அவரை இற‌க்‌கி‌, அ‌ந்த‌த் து‌ப்ப‌ட்டி‌யிலே சு‌ற்‌றி, க‌ன்மலை‌யி‌ல் வெ‌ட்டி‌யிரு‌ந்த க‌ல்லறை‌யி‌ல் அவரை வை‌த்து, க‌ல்லறை‌யி‌ன் வாச‌லி‌ல் ஒரு க‌ல்லை‌ப் புர‌ட்டி வை‌த்தான‌். (மாற்கு 15:46)

யேசே‌ப்பு எ‌ன்னு‌ம் பே‌ர் கொ‌ண்ட ஒரு ஆலோசைன‌க்கார‌ன் இரு‌ந்தா‌ன் ; அவ‌‌ன் உ‌த்தமனு‌ம் ‌நீ‌திமானுமா‌யிரு‌ந்தா‌ன். (லூக்கா 23:50)

அவ‌ன் யூதருடைய ப‌ட்டண‌ங்க‌ளிலோ‌ன்றா‌கிய அ‌ரிம‌த்‌தியா‌வி‌லிரு‌ந்து வ‌ந்தவனு‌ம், தேவனுடைய ரா‌ஜ்ய‌த்து‌க்கு‌க் கா‌த்‌திரு‌ந்தவனு‌ம், யூத‌ர்களுடைய ஆலோசனை‌க்கு‌ம் செ‌ய்கைக‌க்கு‌ம் ச‌ம்ம‌தியாதவனுமா‌யிரு‌ந்தா‌ன். (லூக்கா 23:51)

அவ‌ன் ‌பிலா‌த்து‌வி‌ன்‌னிட‌த்‌தி‌ல் போ‌ய், இயேசு‌வி‌ன் ச‌ரீர‌த்தை‌க் கே‌ட்டு, (லூக்கா 23:52)

அதை இற‌க்‌கி‌, மெ‌ல்‌லிய து‌ப்ப‌ட்டி‌யிலே சு‌ற்‌றி, க‌ன்மலை‌யி‌ல் வெ‌ட்ட‌ப்ப‌ட்டதுமா‌ய் ஒரு‌க்காலமூ ஒருவனு‌ம் வை‌க்க‌ப்படாததுமா‌யிரு‌ந்த ஒரு க‌ல்லறை‌யிலே வை‌த்தா‌ன்.(லூக்கா 23:53)

அ‌ந்த நா‌ள் ஆய‌த்தநாளா‌யிரு‌ந்தது; ஓ‌ய்வு நாளு‌ம் ஆர‌ம்பமா‌யி‌ற்று.(லூக்கா 23:54)

க‌லிலேயா‌வி‌லிரு‌ந்து அவருடனே கூட வ‌ந்‌திரு‌ந்த ‌ஸ்‌தீ‌ரிகளு‌ம் ‌பி‌ன்செ‌ன்று, க‌ல்லறையையு‌ம் ‌ஸ்‌தீ‌ரிகளு‌ம் ‌பி‌ன்செ‌ன்று, க‌ல்லறையையு‌ம் அவருடைய ச‌ரீர‌ம் வை‌க்க‌ப்ப‌ட்ட ‌வித‌த்தையு‌ம் பா‌ர்‌த்து, (லூக்கா 23:55)

திரு‌ம்‌பி‌ப் போ‌ய், க‌ந்தவ‌ர்‌க்க‌ங்களையு‌ம் ப‌ரிமள‌த்தைல‌ங்களையு‌ம் ஆய‌த்த‌ம் ப‌ண்‌ணி, க‌ற்பனை‌யி‌ன்படியே ஓ‌‌ய்வு நா‌ளி‌ல் ஓ‌ய்‌ந்‌திரு‌ந்தா‌ர்க‌ள்.(லூக்கா 23:5)

பிலாத்துவிடம் இயேசுவின் உடலை சிலுவையிலிருந்து இறக்குவதற்கு அனுமதி பெற்று இயேசுவை ஒரு புதிய கல்லறை ஒன்றில் அடக்கம் செய்தனர்.