இயேசு ம‌ரி‌த்த பின் வந்த 2 சீடர்கள்

இயேசுநாதர் வாழ்ந்த காலத்தில் அவருடன் வாழ்ந்து, அவரது போதனைகளைப் பின்பற்றிய 12 சீடர்கள் பற்றி மு‌ன்பு பா‌ர்‌த்தோ‌ம். அதன்பின் வந்த 2 சீடர்களைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

1. ப‌ரிசு‌த்த மத்தியா : இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, தம் சீடர்களுக்கு காட்சித் தந்து விடை பெற்றுச் சென்றார். இந்நிலையில் இச்சீடர்கள் தம்முடன் இல்லாத யூதாஸ் காரியோத்துக்குப் பதிலாக மத்தியா என்பவனை 12-ம் சீடனாகச் சேர்த்துக் கொண்டனர். (அப்போஸ்தலர் 1 : 26)

2. ப‌ரிசு‌த்த பவுல் : பன்னிரெண்டு சீடர்களைத் தவிர மேலும் ஒருவர் இயேசுநாதரின் மனமார்ந்த சீடனாக வாழ்ந்தார். அவர்தான் பரி. பவுல் என்பவர்.

இவர் இயேசுநாதர் வாழ்ந்த காலத்தில் இருந்தவர். இவரின் இயற்பெயர் சவுல். தன் இள‌ம்வயதிலிருந்து யூத மதக் கோட்பாடுகளில் வைராக்கியமுள்ளவராக இருந்தார். சொல்லப் போனால் ஒரு யூதமத வெறியனாகவும் இருந்தார். இயேசு நாதரின் மறைவிற்குப் பின் வந்த தலைச்சிறந்த குழுத் தலைவர்களில் ஒருவரான ஸ்தேவான் என்பவரின் கொலையில் பங்கு உள்ளவர் என்று அடையாளம் காட்டப்பட்டவர்.

தன் 35ஆம் வயதில் இயேசுவை தன் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்டார். வரலாற்றின்படி கி.பி. 54-68க்கிடையில் நீரோ மன்னனாட்சியில் தியாக மரணமடைந்தார்.

விவிலியத்தில் (பைபிள்) இயேசுநாதர் பிறப்பும், பிறப்பிற்கு பின் நடந்தவைகளை குறித்து எழுதிய நூல்கள் பகுதிக்கு புதிய ஏற்பாடு என்று பெயர். இதில் 27 நூல்கள் உள்ளன. இவற்றில் 13 நூல்கள் பரி. பவுல் எழுதியனவாகும்.

இயேசுநாதர் உரைத்தபடி, அவர் மறைவுக்குப் பின் இறைச் செய்தியை பல நாடுகளுக்கும் ஏந்திச் சென்றவர் பரி. பவுல் என்பதை விவிலியத்தில் காணலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்