அழகு என்று படித்தவுடன், இந்தத் தொகுப்பு அழகானவர்களுக்கு என எண்ணிவிட வேண்டாம். அழகினால் ஏற்படும் ஆபத்து என்று ஆபத்தைப் பற்றி அச்சப்படுபவர்களுக்குத்தான் இந்த விஷயத்தைச் சொல்ல விரும்புகிறோம்.
அதாவது சாராள் என்பவள் ஆபிரகாமின் மனைவி. ஆபிரகாம் தன்னுடைய சொந்த தேசத்தை விட்டு புதிய தேசத்தில் குடியேறினான். அவனுக்குள் அந்த தேசத்து மக்களை குறித்த பயம் எழுந்தது. ஏனென்றால் சாராள் மிகுந்த சவுந்தரியமும், அழகும் நிறைந்தவள். அவளுடைய அழகின் நிமித்தம் எங்கே ஆபிரகாமை கொன்று விடுவார்களோ என்ற பயத்தினால் தன் மனைவியை சகோதரி என்று மற்றவர்களிடம் கூறினான்.
சாராள் எல்லாக் காரியத்தையும் தேவனிடம் சொல்லி ஜெபிக்கும் பழக்கத்தை உடையவள்.
ஆபிரகாம் பயந்தது போலவே நேரிட்டது. அந்த தேசத்தின் ராஜா, ஆள் அனுப்பி சாராளை அழைப்பித்தான். சாராள் தொடர்ந்து ஜெபித்தபடியே சென்றாள்.
தேவன் இரவிலே ராஜாவை எச்சரித்தபடியால் சாராளுக்கு ஒர தீங்கும் செய்யாமல் அவளை அனுப்பிவிட்டான்.
மேற்கூறிய கதையில் ஓர் உண்மைக் கூற்று புதைந்திருப்பதைக் காணலாம்.
அதாவது நடக்காத ஓர் அசம்பாவிதமான காரியத்தை நினைத்து நினைத்து பயப்படுவதை விட்டுவிடுங்கள். ஏனென்றால் நாம் பயப்படுவது நமக்கு வந்து நேரிடும்.
பயத்தை புறம்பே தள்ளிவிட்டு கர்த்தர் மேல் நம்பிக்கை வையுங்கள்.
ஆபிரகாமையும் சாராளையும் காத்த தேவன் எல்லோரையும் சகல பயங்களில் இருந்து விடுவிப்பார்.
எதிர்த்து நிற்பது நாட்டின் ராஜாவே ஆனாலும் சரி நம்மை விடுவிக்க ராஜாவையே ஆளுகிற தேவன் உண்டு என்பதை மறக்கக் கூடாது.