மிதமான நடைப்பயிற்சி, மூச்சு பயிற்சி, மிதமான உடற்பயிற்சிகளை செய்யுங்கள். சிசேரியன் செய்தவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி பின்பற்றுவது நல்லது.
கை, முகம், மார்பகங்கள் அனைத்தும் சுத்தமாக பராமரித்து கொள்ளுங்கள். ஒவ்வொரு முறை பால் கொடுத்த பிறகு மார்பகங்களை சுத்தப்படுத்துங்கள்.
தண்ணீரைத் தேவையான அளவு குடிப்பது நல்லது. பழங்கள், பழச்சாறுகள், இளநீர், நீர் மோர் எனச் சாப்பிடுவது நல்லது. கீரைகள், சிறுதானியங்கள், மீன், முட்டை, காய்கறிகள், பருப்பு-பயறு வகைகள் போன்றவற்றை அவசியம்.
குழந்தைகள் அழுவதும் வாந்தி எடுப்பதும் இயல்புதான். அதுபோல பேதி, வயிற்றுபோக்கும் இயல்பே. ஆனால், தொடர்ந்து இந்தப் பிரச்னை இருந்தாலோ இயல்புக்கு மீறி இருந்தாலோ சுயமருத்துவம் செய்யாமல் குழந்தைகள் நல மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.