குழந்தை வளர்ப்பில் கவனம்

செவ்வாய், 11 டிசம்பர் 2012 (18:09 IST)
FILE
இத்தலைமுறையினரை பொறுத்தவரையில் குழந்தை வளர்ப்பு என்பது தங்கள் குழந்தை விருப்பப்படுவதை அதன் தேவை கருதாமல் வாங்கி கொடுப்பது என்றாகிவிட்டது.

தாய் தந்தை இருவரும் வேலைக்கு சென்று வாழ்க்கை தரத்தை உயர்த்த முற்படும் இந்த தறுவாயில் வீட்டில் இருக்கும் குழந்தைகளின் தேவையை பூர்த்தி செய்வதையே குறிக்கோளாக கொண்டு நாட்கள் ஓடுகிறது. இதனால் பல வகையான இன்னல்களை சந்திக்க நேரிடும் .

குழந்தைகளோடு நேரம் செலவழிக்காமல் அவர்கள் விருப்பப்படும் பொருட்களை மட்டும் வாங்கித்தருவதன் மூலம் பாசத்தை வெளிப்படுத்துவது சரியான செயல் இல்லை.

கேட்டவுடன் ஒரு பொருள் கிடைத்து விடுவதால் குழந்தைகளுக்கு அதன் அருமை தெரியாமல் போய்விடுவதோடு, அவர்கள் பகிர்தல், பொறுமை, பொறுப்பு மற்றும் சகிப்புத்தன்மை இல்லாதவர்களாக வளர இது வழிவகுக்கிறது.

குழந்தைகளுக்கு சிறு வயது முதலே நன்கு யோசித்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுப்பது அவசியமாகும்.இந்த சிறிய விடயம் நாளை குழந்தைகளின் வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் திறன்கொண்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்