ஹேப்பி பர்த்டே அனிகா - குட்டி நயனுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

திங்கள், 28 நவம்பர் 2022 (09:20 IST)
குழந்தை நட்சத்திரம் அனிகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!
 
தல அஜித் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற 'என்னை அறிந்தால்" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.
 
இதைடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். பார்த்த சீக்கிரத்தில் கிடு கிடுவென வளர்ந்து பெரிய மனுஷியாகிவிட்டார் அனிகா. காரணம் அவருக்கு ஹீரோயின் ஆசை பேராசையாக உள்ளது. 
 
அதன் காரணமாகவே அவர் தொடர்ந்து வித விதமான போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு நான் வளர்ந்துவிட்டேன் என்பதை எல்லோருக்கும் சொல்லுவார். 
 
இந்நிலையில் நேற்று அனிகா தனது 18வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என எல்லோரும் வாழ்த்துக்கூறினார்கள். மேலும், பிறந்தநாளில் எடுத்துக்கொண்ட தனது போட்டோக்களை இஸ்தாவில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்