தந்தி டிவியின் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் தேமுதிக பற்றிய விவாதத்தில் பங்கேற்றிய நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமானும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த அருணனும் நேரலை நிகழ்ச்சியில் மூன்றாம் தர வார்த்தைகளை பயன்படுத்தியது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பெரியாரை பற்றி சீமான் தவறாக பேசியதாக குற்றச்சாட்டு வைத்த அருணனை உனக்கு நாகரீகம் இருக்கா? நீ பேராசிரியரா? போயா லூசு என சீமான் பேச, நீதாண்டா லூசு என பதிலுக்கு அருணன் பேசினார்.
சமூகத்தில் பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் மனிதர்கள் இப்படி தொலைக்காட்சி நேரலை விவாதத்தில் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல், ஒருமையில், மரியாதையில்லாமல் நடப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்.
ஒரு எழுத்தாளரும், வயதில் மூத்தவருமான பேராசிரியர் அருணனை ஒருமையில் லூசு என பேசிய சீமானுடைய அந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. நாம் தமிழர் என வீராப்புடன் பேசும் சீமான் அவர்களே வயதில் மூத்தவரை ஒருமையில் பேசுவது தான் நீங்கள் கற்றுக்கொண்ட தமிழின பண்பா?.
நன்றி: தந்தி டிவி
தமிழன் வீரத்தில் சிறந்தவன், கோபம் கொண்டவன் ஆனால் அனைவரையும் மதிக்க தெரிந்தவன் எந்த சூழ்நிலையிலும் நிதானம் இழக்க மாட்டான், தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்த மாட்டான்.
எப்பொழுதும் கோபம் கொப்பளிக்கும் முகத்துடன் ஆவேசமாக பேசும் சீமான் அவர்களே, அண்மையில் கிறிஸ்தவர்களை பற்றியும் அவர்களது நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் விதமாக பிணந்தின்னி கிறிஸ்தவர்கள் என்று பேசினீர்கள். இதே போல் இந்து மதத்தவர்களை பற்றி உங்களால் பேச முடியுமா?... அப்படியென்றால் நீங்கள் ஒரு மதவாத அரசியல்வாதியா?...
அரசியல் நாகரிகம் இல்லாமல், பொறுக்கித்தனமான வார்த்தை ப்ரயோகம் செய்வது, எதிரில் விமர்சிக்கும் நபரை கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் அய்யோக்கித்தனமான வார்த்தைகளை உபயோகிப்பது. இது போன்ற நடவடிக்கைகள் கூட்டத்தினர் மத்தியில் உங்களுக்கு பலத்த கை தட்டலை வாங்கி தரலாம். அது நீங்கள் கூட்டிய கூட்டம்.
அரசியல் நாகரீகம் இல்லாமல் வார்த்தைகளில் தரம் இல்லாமல் பேசும் உங்களால் உங்கள் கட்சிக்கும் மக்கள் மத்தியில் கெட்டப் பெயரே வரும். கொஞ்சம் பொறுப்புடனும், கவனமுடனும், ஒரு சார்பில்லாமல், அனைத்து தரப்பட்ட மக்களும் ஏற்றுக்கொள்ளும் விதமாக பேச கற்றுக்கொள்ளுங்கள்.
இப்படி நிதானமில்லாமல் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற அக்கறை இல்லாமல் பேசுவது, மக்களை அவமதிக்கும் செயலாகும். இது போன்றவர்களை விவாதத்துக்கு அழைப்பதை ஊடகங்கள் தவிர்ப்பது சிறந்தது. பொறுப்பில்லாத எந்த செயலும் தவிர்க்கப்பட வேண்டியதே.
நீங்கள் அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்டீர்கள் சீமான். வாய் இருப்பதால், என்ன வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் பேசி விட முடியாது. இடம், பொருள் பார்த்து பேச வேண்டும். யாரை பேசுகிறோம், என்ன பேசுகிறோம், நம்மை யார் கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்ற சுய சிந்தனையுடன் பேசினால் உங்களுக்கும் நல்லது. அதுவே உங்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்லும். இல்லையென்றால் காலப்போக்கில் நீங்கள் இருக்கும் இடமே தெரியாமல் போய் விடும்.