இந்தியாவின் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர்கள் பற்றி அறிந்துகொள்வோம்!!

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (20:42 IST)
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.

இதுவரை இந்தியவின் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர்கள் பற்றி அறிந்துகொள்வோம்.

இந்தியாவின் முதல் பட்ஜெட்டை முதல் நிதியமசைச்சராகப் பொறுப்பேற்ற ஆர்.கே.சண்முகம் செட்டி சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை  1947 ஆம் ஆண்டு நவம்பர் 26 -ம் தேதி தாக்கல் செய்தார்.

இரண்டவதாக குடியரசு இந்தியாவின் முதல் பட்ஜெட் முன்னாள் பிரடவர் நேரு தலைமையில்  தாக்கல் செய்தவர் ஜான் மத்தாய் ஆவார்.

1973 -74 ஆம் ஆண்டில் பிரதமர் இந்திராகாந்த் தலைமயிலான மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் முதன் முறையாக ரூ.550 கோடி பற்றாக்குறை பட்ஜெட் எனபதால் இதை பற்றக்குறை பட்ஜெட் என்று விமர்சிக்கப்பட்டது.

கடந்த 1986 ஆம் ஆண்டு மத்திய அமைச்சர் விபிசிங் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார். இப்பட்ஜெட்டில் வரிஏய்ப்பு செய்பவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க திட்டம் உள்ளடக்கியது.

1991-02 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பட்ஜெட் தாக்கல் செய்தார். இவர் சிறந்த பொருளாதார அறிஞர் என்றப் புகழப்பட்டவர்.

பின்னர் 1997 ஆம் ஆண்டில் மத்திய அமைசர் ப.சிதம்பர்ம பட்ஜெட் தக்கல் செய்தார்.

2000-2001 ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சிங்ஹா பட்ஜெட் தாக்கல் செய்தார். இது அனைவராலும் பாராட்டப்பட்டது.

கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய நிதி அமைசர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  அப்போது தமிழில் உள்ள திருக்குறளை கூறி பொருள் கூறி அசத்தினார்.

இந்நிலையில் இவ்வாண்டு(2021) பிப்ரவரி 1 ஆம் தெதி மத்திய பட்ஜெட்டை அவரே தாக்கல் செய்யவுள்ளார். மேலும் அடுத்த நிதியாண்டில் ஜிடிபி 11%% உயர வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றனர்.

இப்பட்ஜெட்டை இரு அமர்வுகளாக நிகழவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்