கார்களின் விலை உயர்கிறது: பட்ஜெட்டில் அருண் ஜேட்லி தகவல்
திங்கள், 29 பிப்ரவரி 2016 (14:42 IST)
கார்களின் விலை உயர்த்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் மக்களின் எதிர்பார்பபுகள் நிறைவேற்றப்படவில்லை என்ற அதிருப்தி நிலவுகின்றது.
பட்ஜெட்டில், வருமான வரிவிலக்கில் மாற்றம் இல்லை. என்று தெரிவிக்கப்பட்டிருப்பது பெரும் ஏமாற்றத்தை நிலவுவதாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
பட்ஜெட்டில். கார்களின் விலை உயர்த்தப்படும் என்று நிதியமைச்சர் தனது பஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, சிறிய ரக கார்கள் 1 சதவீதம், டீசல் கார்கள் 2.5 சதவீதம் சொகுசு கார் 4 சதவீதம் விலை உயர்கிறது.
இந்தனால், கார்களை வாங்கத் திட்டமிட்டிருந்தவர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.