பட்ஜெட்டில் வருமான வரி விலக்கின் உச்ச வரம்பில் மாற்றமில்லை

திங்கள், 29 பிப்ரவரி 2016 (12:41 IST)
2016-2017 ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். இதில் வருமான வரியில் மாற்றம் ஏதும் இல்லை என கூறப்பட்டுள்ளது.


 
 
புதிதாக தொடங்கப்படும் உற்பத்தி நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்கப்படும் எனவும் வருமான வரி விகிதங்களில் மாற்றம் ஏதும் இல்லை எனவும் இன்று பட்ஜெட் தாக்கல் செய்த அருண் ஜெட்லி கூறினார்.
 
35 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட வீட்டுக் கடன் வட்டிக்கு 50 ஆயிரம் ரூபாய் வரிச்சலுகை அளிக்கப்படும் எனவும். வரி வசூலிப்பை எளிமையாக்க அரசு நடவடிக்கை எனவும் அருண் ஜெட்லி கூறினார்.
 
கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிகளுக்கு சிறப்பு காப்புரிமைக்கு ஆலோசனையளிக்கப்படும். 5 கோடி ரூபாய்க்கு குறைவாக தொழில் செய்யும் வனிகநிறுவனங்ளுக்கான வரி 29 சதவீதம் குறைக்கப்படும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்