உலக அளவில் 233 கோடிகளை கடந்த ஐஸ்வர்யா ராய் படம்

சனி, 19 நவம்பர் 2016 (16:16 IST)
கரண் ஜோஹர் இயக்கத்தில் ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா, ஐஸ்வர்யா ராய் நடித்த ஏ தில் ஹை முஷ்கில் திரைப்படம், உலக அளவில் 233 கோடிகளை கடந்துள்ளது.


 
 
நெருக்கமான காட்சிகள் நிறைந்த இந்தப் படத்தில் பாகிஸ்தான் நடிகர் நடித்ததால் சர்ச்சையானது. அதுவே படத்துக்கு விளம்பரமாகவும் அமைந்தது. ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய் நெருக்கமான காட்சிகள் படத்தின் இன்னொரு பிளஸ்ஸாக அமைந்தது.
 
இந்தியாவில் 153 கோடிகளையும், வெளிநாடுகளில் 80 கோடிகளையும் இப்படம் வசூலித்துள்ளது. இந்த வருடம் வெளியான படங்களில் கலெக்ஷனில் சுல்தானுக்கு அடுத்த இடத்தை இப்படம் கைப்பற்றியுள்ளது. 

 

வெப்துனியாவைப் படிக்கவும்