கமல்ஹாசனிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் - அமீர் கான்

வியாழன், 26 மார்ச் 2015 (11:30 IST)
கமல்ஹாசன் தலைவராக இருக்கும் ஃபிக்கி - திரைப்படத்துறை ஆண்டுவிழாக் கூட்டம் மும்பையில் புதன்கிழமை தொடங்கியது. இதில் அமீர் கான் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

 
அப்போது பேசிய அமீர் கான், கமல்ஹாசனிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். அவர் பேசியதன் முழுவிவரம் வருமாறு.
 
"திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கப்பெறும் பட்சத்தில், அந்தப் படத்தை எந்தவித அச்சமுமின்றி ரசிகர்கள் கண்டுகளிக்க வழிவகை செய்வது சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் பொறுப்பாகும்.
ஒரு திரைப்படம் சிலருக்குப் பிடிக்கலாம். சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். அது ரசிகர்களுடைய தனிப்பட்ட உரிமை. ஆனால் அந்தப் படத்தை திரையிடத் தடை விதிப்பது சரியல்ல.
 
விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து திரைத்துறையினர் ஒன்றாக இணைந்து போராடியபோது, என்னால் அதில் பங்கேற்க இயலவில்லை. அதற்காக நடிகர் கமலஹாசனிடம் நான் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்றார் அமீர் கான்.

வெப்துனியாவைப் படிக்கவும்