உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருவதால் பல லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் குறித்த சரியான புரிதல் இல்லாமையால் பல்வேறு போலி செய்திகளும், தவறான தகவல்களும் தொடர்ந்து மக்களிடையே பரப்பப்பட்டு வருகின்றன. முக்கியமாக போலி செய்திகள் பரவுவதில் சமூக வலைதளங்கள் முக்கிய காரணியாக விளங்குகின்றன.
இதுகுறித்து டிக்டாக் சமூக செயலி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய கேப்டன் விராட் கோலியுடன், இந்தி நடிகர்கள் ஆயுஷ்மான் குரானா, சாரா அலி கான், க்ரித்தி சனோன் ஆகியோர் நடித்து வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் போலியான தகவல்களை பரப்புவது கொரோனா பரவுவதை காட்டிலும் ஆபத்தான விஷயம் என கூறியுள்ள அவர்கள் கொரோனா குறித்த போலி வீடியோக்கள் மற்றும் செய்திகளை ஃபார்வேர்டு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.