வீராட்கோலி அனுஷ்கா சர்மாவுடன் நடிக்கவில்லையாம்

சனி, 29 நவம்பர் 2014 (11:39 IST)
கிரிக்கெட் வீரர் வீராட் கோலியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் நட்பைத் தாண்டிய உறவை தங்களுக்குள் நெடுங்காலமாக பேணி வருகின்றனர். இதுபற்றி திறந்த மனதுடன் இருவரும் பேசவும் செய்தனர்.
இதுபோல் ஏதாவது நடந்தால் உடனே அவர்களை வைத்து படம் செய்வதுதான் இந்திய திரையுலகின் முதல் கடமையாக இருக்கும். அதற்கேற்ப, யாஷ் ராஜ் ஃபிலிம்ஸில் அனுஷ்கா சர்மா நடிக்கும் படத்தில் ஷாருக்கானுக்குப் பதில் வீராட் கோலியை ஒப்பந்தம் செய்திருப்பதாக சில ஊடகங்கள் எழுதின. 
 
மைதானத்தில் கோலியை இறக்கினால் ரன் கிடைக்கலாம். அதற்காக திரையில் நடிக்க வைத்தால் காசு பெயருமா? கிரிக்கெட்டில் கோலி டான் என்றாலும் சினிமாவில் அவர் பந்து எடுத்துப் போடுகிற பையன் மட்டுமே. 
 
அனுஷ்கா சர்மா நடிக்கும் எங்களின் படத்தில் கோலியை நடிக்க வைக்கும் எண்ணமே கிடையாது என்று யாஷ் ராஷா ஃபிலிம்ஸ் திட்டவட்டமாக கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்