பட்டய கிளப்பப்போகும் விக்ரம் வேதா இந்தி ரீமேக் - விஜய் சேதுபதி ரோலில் யார் தெரியுமா?

சனி, 10 ஜூலை 2021 (16:23 IST)
கடந்த 2017 ஆம் ஆண்டு மாதவன்-விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர்-காயத்ரி ஆகியோர் இயக்கிய ”விக்ரம் வேதா” திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது.  தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் செய்வதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 
 
முன்னதாக இதில்  விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஷாருக்கான், மாதவன் கதாபாத்திரத்தில் சல்மான்கான் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால், அவர்கள் இருவருமே ஏற்கனவே கமிட்டான படத்தில் பிசியாக இருப்பதால் தற்போது விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ரித்திக் ரோஷன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலிகான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்போவதை பல நாட்களாக அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது படக்குழுவே உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளிவருகிறது. மேலும், இப்படம் 2022ம் ஆண்டில்  ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்