தீவிரமடையும் சகிப்புத்தன்மையின்மையால் நாட்டுக்கு பாதிப்பு - ஷாருக்கான்

செவ்வாய், 3 நவம்பர் 2015 (12:39 IST)
மோடி ஆட்சியின் கீழ் அடிப்படைவாதிகளின் ஆதிக்கம் வலுப்பெற்றிருக்கிறது. நாட்டில் நிலவும் கருத்து சுதந்திரத்துக்கான அச்சுறுத்தல் அனைத்துத் தரப்பினரையும் கவலைக்கொள்ள செய்துள்ளது. இதுகுறித்து நடிகர் ஷாருக்கான் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.


 
 
"இந்தியாவில் சகிப்புதன்மையின்மை தீவிரமடைந்து வருகிறது. நம்முடைய நாடு வளர விரும்பினால், இந்தியாவில் நிலவும் பல்வகையான கலாச்சரங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். அனைத்து மதங்களும் சமமானது என்று நாம் நம்பவில்லை என்றால் நாடு சக்தி வாய்ந்ததாக இருக்க முடியாது.
 
மதம், படைப்பாற்றல் தொடர்பான சகிப்பின்மையைக் களைந்து, நாட்டை வளர்ச்சி அடைய செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாட்டில் மதச்சார்பின்மையை வளர்க்க வேண்டும். இல்லை என்றால் தேசப்பற்றின் பெயரால் மோசமான செயல்கள் நடக்கும்.
 
சகிப்புத்தன்மையின்மைக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவாக எனக்கு வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதினை திருப்பி அளிக்க தயார்."
 
கருத்து சுதந்திரத்துக்கு எதிரான மத, சாதி அடிப்படைவாதிகளின் செயலுக்கு பாலிவுட் நடிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சிவசேனா கட்சியின் அடிப்படைவாதச் செயல்களையும் பலர் கண்டித்துள்ளனர். ஷாருக்கானின் வெளிப்படையான பேச்சும் அதனை பிரபதிபலிப்பதாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்