எப்படி இதையெல்லாம் தாங்கிக்கிறீங்க என்று பேட்டியொன்றில் கேட்டபோது, நான் இதையெல்லாம் படிக்கிறதோ, பார்க்கிறதோ இல்லை என்றார் பிரபுதேவா. அந்த மனதைரியம் அவருக்கு கடைசியில் வெற்றியை தந்திருக்கிறது.
சென்ற வாரம் இவரது இயக்கத்தில் வெளியான, அக்ஷய் குமாரின் சிங் இஸ் பிளிங் ஹிட். முதல் 6 தினங்களில் இந்தியாவில் மட்டும் 73.40 கோடிகளை வசூலித்துள்ளது. வெளிநாடுகளின் வசூலையும் சேர்த்தால் எண்பதை தாண்டும். ஆடியோ, வீடியோ ரைட்ஸ், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை என படம் இப்போதே 100 கோடிகளை தாண்டி நிற்கிறது.