அபிஷேக்பச்சன், ரிஷி கபூர் நடிக்கும் இந்தப் படத்தில் அசின் ஹீரோயின். உமேஷ் சுக்லா இயக்கம். படம் முடியும் நிலையில் சோனாக்ஷி சின்காவையும் படத்தில் இழுத்திருக்கிறார்கள். அவருக்கு படத்தில் சிறப்புத் தோற்றமாம்.
அசின் நடிப்பதை கண்டு கொள்ளாத ஊடகங்கள், சோனாக்ஷி துண்டு வேடத்தில் நடிப்பதை அறிந்ததும் அதுபற்றி செய்திகளாக வெளியிட்டு அசினின் பிபியை எகிற வைக்கின்றன. உமேஷ் சுக்லா இயக்கிய ஓ மை காட் படத்தில் சோனாக்ஷி ஒரு அயிட்டம் பாடலுக்கு ஆடியிருக்கிறார். அந்த ராசியை வைத்து இதிலும் ஒரு சின்ன வேடத்தை தந்திருக்கிறார் உமேஷ்.