மீண்டும் இணையும் சென்னை எக்ஸ்பிரஸ் மெகா கூட்டணி

வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (18:43 IST)
இந்திப்பட உலகின் நம்பர் ஒன் கமர்ஷியல் இயக்குனர் ரோஹித் ஷெட்டிதான். சென்னை எக்ஸ்பிரஸ், சிங்கம் ரிட்டர்ன்ஸ் படங்களின் வெற்றி அதனை உறுதி செய்திருக்கிறது.

 
ரோஹித் ஷெட்டி மீண்டும் ஷாருக்கானுடன் இணையும் படம் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்தப் படத்தின் ஹைலைட், இந்தியின் முக்கிய 17 நடிகர்கள் இதில் நடிக்கிறார்கள். அவர்கள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

 
தற்போது யாஷ்ராஜ் ஃபிலிம்ஸின் ஃபேன் படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இப்படம் குழந்தைகளை கவரும் என அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்