நகை வேட்டையில் இறங்கிய மான் வேட்டை சல்மான்

வியாழன், 28 ஜூலை 2016 (13:01 IST)
இருக்கிற அனைத்து கடவுள்களாலும் ஆசிர்வதிக்கப்பட்டவர் என்றால் அது சல்மான் கானாகத்தான் இருக்க வேண்டும். நடைபாதையில் தூங்கியவரை கார் ஏற்றி கொன்ற வழக்கு, மான் வேட்டையாடிய வழக்கு என்று சாதாரணர்கள் வாழ்நாள் முழுதும் சிறையில் இருக்க வேண்டிய வழக்குகளில் வெகு சாதாரணமாக வெளியே வந்துவிட்டார் சல்மான். அவர் நடித்த படம் என்னடாவென்றால் உலக ஓட்டம் ஓடுகிறது.



பீயிங் ஹ்யூமன் என்ற உடைகள் தயாரித்து விற்கும் சல்மான் கான், பீயிங் ஹ்யூமன் என்ற பெயரில் நகை வியாபாரத்தில் இறங்க உள்ளார். சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் சல்மானின் சகோதரி அர்பிதா கான் அதனை உறுதி செய்தார்.

சல்மான் கான் திறக்கவிருக்கும் நகைக்கடையில் 70 சதவீதம் பெண்களுக்கான நகையும், 30 சதவீதம் ஆண்களுக்கான நகையும் இருக்குமாம். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டுக்கு திணறும் போது, இதோ சல்மான் தருகிறார் 70 சதவீத இடஒதுக்கீடு.

என்ஜாய் கேர்ள்ஸ்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்