ஷோலேயில் அமிதாப்பச்சன், தர்மேந்திரா, அம்ஜத்கானுக்கு இணையாக கலக்கியவர் ஹேமமாலினி. அவரது கதாபாத்திரம் ஷோலேக்கு புதுவிதமான வண்ணத்தை தந்தது. 39 வருடங்களுக்குப் பிறகு ரமேஷ் சிப்பியும் ஹேமமாலினியும் ஒன்று சேர்கிறார்கள்.
தர்மேந்திராவை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் குடும்ப வாழ்க்கையில் பின்னிப் பிணைந்த பிறகும் ஹேமமாலினி இயக்குனர், நடிகை என்ற அளவில் சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் பங்களிப்பு செலுத்தி வந்தார். மூத்த மகள் இஷா தியோலுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது.