ஜுன் 12 திரைக்கு வரும் கங்கனா, மாதவன் திரைப்படம்

வியாழன், 5 மார்ச் 2015 (15:09 IST)
மாதவன் தனி ஹீரோவாக நடித்த இந்திப் படங்களில் கமர்ஷியலாக வெற்றி பெற்ற படம், தனு வெட்ஸ் மனு. ராஞ்சனாவை இயக்கிய ஆனந்த் எல்.ராய் படத்தை இயக்கியிருந்தார்.
ராஞ்சனாவின் ஹிட்டுக்குப் பிறகு அவர், தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் இரண்டாம் பாகத்தை இயக்கினார். முதல் பாகத்தில் நடித்த கங்கனா, மாதவனே இதிலும்.
 
படம் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. ஜுன் மாதம் 12 -ஆம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்