பிரபுதேவாவின் ஆக்ஷன் ஜாக்சனின் ஒரிஜினல் படம் எது தெரியுமா?

சனி, 25 அக்டோபர் 2014 (13:30 IST)
பிரபுதேவா இந்தியில் இயக்கும் ஐந்தாவது படம் ஆக்ஷன் ஜாக்சன். டிசம்பர் 5 திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை தற்போது வெளியிட்டுள்ளனர்.
 
பிரபுதேவா இந்தியில் இயக்கிய முதல் படம் வான்டட். தெலுங்கில் வெளியான போக்கிரியின் இந்தி ரீமேக். அடுத்து வெளியான ரவுடி ரத்தோர் தெலுங்குப் படம் விக்ரமார்குடுவின் இந்தி ரீமேக். அடுத்து இயக்கிய ராமையா வஸ்தாவையா பிரபுதேவா தெலுங்கில் இயக்கிய முதல் படத்தின் இந்தி ரீமேக்.

நான்காவது வெளியான ரா...ராஜ்குமார் பிரபுதேவாவின் சொந்த ஸ்கிரிப்ட் என சொல்லப்பட்டது. படம் அட்டர் ப்ளாப். அதனால் இந்தமுறை பாதுகாப்பாக இன்னொரு ரீமேக்குடன் களமிறங்கியிருக்கிறார். ஆக்ஷன் ஜாக்சன் தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான தூக்குடு படத்தின் ரீமேக்.
 
அஜய்தேவ் கான், சோனாக்ஷி நடித்துள்ள இந்தப் படம் பிரபுதேவாவுக்கு இன்னொரு ஹிட்டாக அமையும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.
 
ரீமேக் படங்கள் இயக்கியே 25 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்த பெருமை பிரபுதேவாவையே சேரும்.
 
கலக்குங்க மாஸ்டர்.

வெப்துனியாவைப் படிக்கவும்