ஆக்ஷன் ஜாக்சன் - வெயிட்டர் ஷுட்டரான கதை

சனி, 22 நவம்பர் 2014 (11:21 IST)
மீடியாக்கள் என்னதான் கழுவி ஊற்றினாலும் பிரபுதேவா இயக்குகிற படம் என்றால் பாலிவுட் விநியோகஸ்தர்கள் பர்ஸை திறக்கதான் செய்கிறார்கள். அவரது கமர்ஷியல் இயக்கத்துக்கு காசு கொட்டும் என்ற நம்பிக்கை.
ஹேப்பி நியூ இயர் போன்று பெரிய நடிகர்களின் படங்கள் மட்டும்தான் சமீபமாக இந்தியில் ஒடுகின்றன. மற்ற படங்களில் சில லாபம் பார்த்தாலும் பம்பர்ஹிட் என்று எதுவும் இல்லை. அவர்களின் தற்போதைய ஒரே இலக்கு, டிசம்பர் 5 வெளியாகும் பிரபுதேவாவின் ஆக்ஷன் ஜாக்சன்.
 
ஷாருக், சல்மான் போல் இல்லையென்றாலும் அஜய்தேவ் கானும் ஒரு மினி சூப்பர்ஸ்டார்தான். அவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. எங்கும் விலைபோகக் கூடிய ஆக்ஷன் பண்டம்தான் ஆக்ஷன் ஜாக்சன். அதனால் படம் நிச்சயம் 100 கோடியை தாண்டும் என்பது பாலிவுட் நம்பிக்கை.
 
இதில் தியானத்தில் நம்பிக்கை உள்ள வெயிட்டராக வருகிறாராம் அஜய்தேவ் கான். அவர் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக அதிபயங்கர மனிதரானார் என்பது கதையாம்.
 
படம் பார்க்கிறவர்கள் ஸ்கிரீனை தாண்டி அடி விழாமல் பார்த்துக்கோங்க.

வெப்துனியாவைப் படிக்கவும்