அந்நிகழ்ச்சியில் இருக்கும்போது மற்றவர்களை பற்றி கவலைப்படாத ஓவியா, தன்னைப் பற்றிய விமர்சனங்கள் எழுந்தாலும் அதை பற்றி கண்டுகொள்வதுமில்லை. அவ்வளவு நேர்மையாக நடந்துகொண்டதால் மக்களுக்கு இவரை மிகவும் பிடித்துவிட்டது. பிக் பாஸில் கிடைத்த புகழை வைத்து சமீபத்தில் ஓவியா 90Ml திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்கு ரசிகர்கள் பலரும் கடும் விமர்சனத்தை தெரிவித்தனர்.