காதலரின் வீட்டிற்கு இரவில் செல்வதை யாரும் கண்டுபிடிக்காமல் இருக்க, முக்கியமாக பத்திரிகையாளர்கள் கண்டுபிடிக்காமல் இருக்க நடிகை கத்ரீனா கைஃப் கையாண்ட யுக்தியை நடிகை ஷ்ரத்தா கபூரும் பின்பற்றுவதாக கூறப்படுகிறது. பாலிவுட் நடிகர் பர்ஹான் அக்தர் தனது மனைவி அதுனாவை பிரிய நடிகை ஷ்ரத்தா கபூரே காரணம் என்று பேசப்பட்டது. இதை ஷ்ரத்தா மறுத்தும் யாரும் நம்பாத நிலையில் ஷ்ரத்தா பர்ஹானின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருகிறாராம்.