நேரடி இந்திப் படங்களை இயக்க மாட்டீர்களா என்று கேட்டதற்கு, எனக்கும் நேரடி இந்திப் படத்தை இயக்க ஆசைதான். துப்பாக்கி படமே இந்திக்காக எழுதிய கதைதான். ஆனால் நேரம் சரியாக அமையாததால் தமிழில் முதலில் எடுக்க வேண்டியதாகிவிட்டது. என்னுடைய அடுத்தப் படம் நேரடி இந்திப் படமாக இருக்கும் என கூறினார்.