இரண்டாம் கணவரையும் விவாகரத்து செய்யும் நடிகை!!

திங்கள், 2 ஜனவரி 2017 (17:00 IST)
நடிகை நந்திதாதாஸ், தனது இரண்டாவது கணவரையும் விவாகரத்து செய்ய முடிவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.


 
 
பிரபல பாலிவுட் நடிகை தந்திதாதாஸ், தமிழில் ‘அழகி’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘விஷ்வதுளசி’, ‘நீர்ப்பறவை’  பல படங்களில் நடித்துள்ளார். 
 
நந்திதா, கடந்த 2002ம் ஆண்டு சவுமியா சென் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். அவருடன் 6 ஆண்டுகள் வாழ்ந்தார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை விவாகரத்து செய்தார்.
 
அதன்பிறகு 2010 ஆம் ஆண்டு தொழில் அதிபர் சுபோத் மஸ்காராவை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நந்திதா, சுபோத் மஸ்கராவை பிரிந்து வாழ்ந்தார். இப்போது அவரையும் விவாகரத்து செய்ய இருக்கிறார். 

வெப்துனியாவைப் படிக்கவும்