ரத்தத்தையும், ஆன்மாவையும் தந்திருக்கிறேன்

வியாழன், 4 செப்டம்பர் 2014 (16:15 IST)
மேரி கோம் படத்தைக் குறித்து பேசும் போதெல்லாம் உணர்ச்சிவசப்படுகிறார் ப்ரியங்கா சோப்ரா. அவரது திரை வாழ்க்கையில் ஒரு படத்துக்கு இவ்வளவு தூரம் மெனக்கெடுவது இதுவே முதல்முறை.


 
 
ஒலிம்பிக்கில் குத்துச் சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை தழுவி மேரி கோம் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மேரி கோமாக ப்ரியங்கா சோப்ரா நடித்துள்ளார். மேரி கோமாக தோற்றம் பெறுவதற்காக கடுமையான உடற்பயிற்சி செய்தார் ப்ரியங்கா. கைகளில் நரம்பு புடைக்க, ப்ரியங்காவின் மென்மை தோற்றம் அப்படியே மாறிவிட்டது. படம் மட்டும் வெற்றி பெறவில்லையென்றால்... என்று ப்ரியங்கா சொல்லும் போதே உலகளவு விரக்தி எட்டிப் பார்க்கிறது.
 
இந்தப் படத்தில் மேரி கோமை அப்படியே பிரதிபலிப்பதில் எடுத்துக் கொண்ட முயற்சியைவிட அவரது ஸ்பிரிட்டையும், பர்சனாலிட்டியையும் திரையில் கொண்டு வருவதில்தான் அதிக கவனம் செலுத்தினேன் என்று கூறியுள்ளார். இந்தப் படத்துக்காக தனது ரத்தத்தையும், ஆன்மாவையும் தந்துள்ளதாக ப்ரியங்கா உணர்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
 
ஓமங் குமார் இயக்கத்தில் சஞ்சய் லீலா பன்சாலி தயாரித்துள்ள இப்படம் வரும் ஐந்தாம் தேதி திரைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்