ரத்தம் தெறிக்க முத்தமிட்ட நடிகை

வியாழன், 17 ஏப்ரல் 2014 (15:25 IST)
குயின் படத்தில் கங்கனா ரனவத்தின் நடிப்பும், படத்தின் வெற்றியும் அவரை முன்னணி நாயகியாக்கியுள்ளது. கரீனா கபூரைப் போன்ற முன்னணி நாயகி அல்ல. ஹீரோவுக்கு இணையான நாயகி. வித்யாபாலனை போல. ஏப்ரல் 25 வெளியாகவிருக்கும் ரனவத்தின் ரிவால்வர் ராணி குறித்த முன்னோட்ட தகவல்கள் மிரள வைக்கின்றன.
இந்திய சினிமா பல ஆண் செக்ஸ் மேனியாக்குகளை கண்டிருக்கிறது. முதல்முறையாக ஒரு பெண் - கங்கனா ரனவத் - அதுபோன்ற வேடத்தில் ரிவால்வர் ராணியில் நடித்துள்ளார். அவருடன் நடித்திருப்பவர் வீர் சிங்.
 

படத்தின் ஒரு காட்சியில் ரனவத் போலீஸால் கைது செய்யப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு செல்வதற்கு முன் ஒரேயொரு நிமிஷம் அனுமதி கேட்கும் அவர், திடீரென்று வீர் சிங்கை இழுத்துக் கொண்டு அறைக்குள் பாய்ந்து அவரது உதட்டோடு உதடு பதித்து வெறித்தனமாக முத்தமிடும் காட்சி படத்தில் வருகிறது. குறிப்பிட்ட காட்சியில் ரனவத்தின் ஆக்ரோஷத்தில் வீர் சிங்கின் உதட்டில் ரத்தம் கசிந்துள்ளது. 
காட்சியை படமாக்கியவர்கள், இதுவரை இப்படியொரு முத்தக் காட்சியில் எந்த நடிகையும் நடித்ததில்லை என்று கொஞ்சம் பயத்தோடயே வியக்கிறார்கள். ரனவத்தின் ஆக்ரோஷ அடல்ட் காட்சிக்காகவே ரிவால்வர் ராணி கலெக்சனை அள்ளும் என்கிறார்கள் பாலிவுட்டில்.

வெப்துனியாவைப் படிக்கவும்