ஜான் ஆபிரஹாம், ஸ்ருதிஹாசன் படத்துக்கு சிக்கல்

செவ்வாய், 12 மே 2015 (10:06 IST)
ஜான் ஆபிரஹாம், அனில் கபூர், நானா படேகர், ஸ்ருதி நடிப்பில் தயாராகியுள்ள படம், வெல்கம் பேக். பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட இப்படம் மீண்டும் ஒரு சிக்கலில் மாட்டியுள்ளது.
கதைப்படி அனில் கபூரும், நானா படேகரும் ஸ்ருதியின் சகோதரர்கள். அவர்கள் இருவரும் தங்கை ஸ்ருதிக்கு பிரபல திருமண தகவல் மையம் ஒன்றில் மாப்பிள்ளை தேடுவதாக காட்சி வருகிறது. அந்தக் காட்சியில் தங்களின் நிறுவனத்தின் பெயரை புரமோட் செய்ய வேண்டும் என்று பிரபல திருமண தகவல் மையம் ஒன்று படத்தின் தயாரிப்பாளருடன் ஒப்பந்தம் போட்டு 15 லட்ச ரூபாயும் தந்துள்ளது.
 
படம் முடிந்துப் பார்த்தால் குறிப்பிட்டக் காட்சி படத்தில் இல்லை. இப்போது அந்த நிறுவனம், மோசடி பண்ணிட்டாங்க என்ற புகாருடன் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது.
 
வெல்கம் பேக் இன்னும் பேக்கடிக்கும் என்று தோன்றுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்