ஹிருத்திக் ரோஷனின் புதிய அவதாரம்!

வியாழன், 6 செப்டம்பர் 2018 (10:51 IST)

கணித ஆசிரியராக ஹிருத்திக் ரோஷனாக நடிக்கும் ‘சூப்பர் 30’ படத்தின் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது.
 

பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன்  விகாஷ் பால் இயக்கத்தில் தற்போது சூப்பர் 30 என்றப் படத்தில் நடித்து வருகிறார்.  இவருடன் மருனல் தாகூர், ஆதித்யா, பங்கஜ் திரிபாதி ஆகியோர் நடித்து வருகின்றனர்.இந்த படம் ஆனந்த் குமார் நடத்தும் சூப்பர் 30 என்ற பள்ளியை மையமாக கொண்ட படம்.

இந்நிலையில் சூப்பர் 30 படத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் ஒரு போஸ்டரில் “ராஜவின் எல்லா மகன்களும் ராஜாவாக அரியணைக்கு போக முடியது, யார் அவர்களில் தகுதியானவர்களோ அவரே ராஜா” என்ற மேற்கோளூரயுடன் உள்ளது. மற்றொன்றில் ஒரு வகுப்பு மாணவர்களுடன் ஹிருத்திக் இருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

இந்த படம் வரும் ஆண்டு ஜனவரி 25 வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்