ஹாலிவுட்டுடன் ஒன்றிணையும் பாலிவுட்

செவ்வாய், 21 ஏப்ரல் 2015 (14:14 IST)
ஹாலிவுட் படத்தயாரிப்பு நிறுவனங்கள் இந்திப்பட உலகுடன் கைகோர்த்து படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. ஃப்யூரியஸ் 7 இந்தியாவில் மட்டும் 100 கோடிக்கு மேல் வசூலான பிறகு, ஹாலிவுட் நிறுவனங்களின் விருப்பத்துக்குரிய இடமாக இந்தியா மாறியுள்ளது.
 

 
ஹாலிவுட் நிறுவனம் லயன்ஸ்கேட் தயாரித்த வாரியர்ஸ் படத்தை கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் லயன்ஸ்கேட்டுடன் இணைந்து இந்தியில் ரீமேக் செய்துள்ளது. பிரதர்ஸ் என்ற பெயரில் அக்ஷய் குமார், சித்தார்த் மல்கோத்ரா, ஜாக்கி ஷெராப் நடிப்பில் கரண் மல்கோத்ரா படத்தை இயக்கியுள்ளார். 
 
இந்தப் படத்தைத் தொடர்ந்து ஃபாக்ஸ் ஸ்டாருடன் ஒரு முக்கிய ஒப்பந்தம் போடவிருக்கிறார் கரண் ஜோஹர். அதாவது 6 படங்களை கரண் ஜோஹரின் நிறுவனமும், ஃபாக்ஸ் ஸ்டாரும் இணைந்து தயாரிக்க உள்ளன. 
 
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் இந்திப் படங்களின் சந்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்