தொலைக்காட்சி ஜாம்பவான்களாக இருந்து படத்தயாரிப்பில் கால்பதித்த சோனி, ஸீ ஆகியவை இன்று மிகப்பெரிய சினிமா தயாரிப்பு நிறுவனங்களாக வளர்ந்து நிற்கின்றன. அவர்களின் தொலைக்காட்சி ஆதிக்கம் சினிமாவுக்கும், சினிமா தயாரிப்பு தொலைக்காட்சி வியாபாரத்துக்கும் பரஸ்பரம் உதவியாக உள்ளன.
பாரிஸை மையமாக வைத்து இயக்கும் ஃபேஷன் தொலைக்காட்சி படத்தயாரிப்பில் இறங்குவதற்கு முன்னோட்டமாக Tamanchey என்ற படத்தின் உரிமையை வாங்கியுள்ளது. இந்தப் படம் தீவிரவாதி அபுசலீமுக்கும் நடிகை மோனிகா பேடிக்கும் இடையிலான காதலை மையப்படுத்தியது. ஃபேஷன் தொலைக்காட்சி விரும்பும் கவர்ச்சி கச்சாப் பொருள் இந்தப் படத்தில் நிறைந்துள்ளது.