19 வருடங்களாக ஓடும் ஷாருக்கான் படத்தை நிறுத்த முடிவு

வியாழன், 9 அக்டோபர் 2014 (10:58 IST)
1995 -இல் கஜோல், ஷாருக்கான் நடிப்பில் வெளியான திரைப்படம் தில்வாலே துல்கனியா லே ஜாயேங்கே. இந்தப் படம் வெளியான காலகட்டத்தில் உலக ஓட்டம் ஒடியது. 
 
மும்பையின் மராத்தா மந்திர் திரையரங்கம் கடந்த 19 வருடங்களாக இந்தப் படத்தை காலைக் காட்சியாக திரையிட்டு வருகிறது. இப்படம் தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக வெளியிடப்படுவதால் திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. 
 
இதனால் 19 வருடங்களாக படத்தை திரையிட்டு வந்தவர்கள் வரும் டிசம்பரிலிருந்து தில்வாலே துல்கனியா லே ஜாயேங்கே –ஐ திரையரங்கிலிருந்து தூக்க முடிவு செய்துள்ளனர்.
இந்தத் தலைமுறையைச் சேர்ந்த அனைவரும் இந்தப் படத்தைப் பார்த்திருப்பார்கள். சிலர் 100 முறைக்கு மேல் இந்தப் படத்தை பார்த்துள்ளனர் என படத்தை 19 வருடங்களாக திரையிட்டு வரும் மராத்தா மந்திர் திரையரங்கின் உரிமையாளர் கூறினார். 
 
படத்தை டிசம்பரிலிருந்து தூக்கப் போவது குறித்து இயக்குனரும், தயாரிப்பாளருமான ஆதித்ய சோப்ராவிடம் பேசவிருப்பதாகவும் அவர் கூறினார். ஆதித்யா சோப்ராதான் தில்வாலே துல்கனியா லே ஜாயேங்கே திரைப்படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்