சோனாக்ஷி நடித்த பெரும்பாலான படங்கள் 100 மற்றும் 200 கோடிகள் வசூலித்தவை. தபாங், தபாங் 2, ரவுடி ரத்தோர், சன் ஆஃப் சர்தார்... இந்த மசாலா மிக்ஸுக்கு நடுவில் எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பு லூத்தரா. அனுராக் காஷ்யப் தயாரித்த இதுபோன்ற நல்ல படங்களில் நடிக்க வேண்டும், மசாலா படங்களுடன் நல்ல படங்களிலும் நடித்தால் மட்டுமே கேரியரை பேலன்ஸ் செய்ய முடியும் என்றெல்லாம் தத்துவார்த்தமாக இப்போதே பேசத் தொடங்கியுள்ளார். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.