பஜிராவ் மஸ்தானி - அடுத்த திரை பிரமாண்டம்

திங்கள், 30 நவம்பர் 2015 (15:21 IST)
சஞ்சய் லீலா பன்சாலியின் படங்கள் என்றால் எப்போதுமே கொஞ்சம் ஸ்பெஷல்.


 

 
'பஜிராவ் மஸ்தானி' படம் சஞ்சய் லீலா பன்சாலிக்கே ஸ்பெஷல்.
 
ரன்வீர், தீபிகா படுகோன், ப்ரியங்கா சோப்ரா நடித்துள்ள இந்த சரித்திரப்படம் மராட்டிய வீரன் பேஷ்வா பஜிராவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
 
ப்ரியங்கா சோப்ரா இருந்தாலும் முக்கிய வேடம் ரன்வீர் சிங்குக்கும், தீபிகா படுகோனுக்கும்தான்.
 
இருவரும் அசத்தலாக நடித்துள்ளனர் என்று ப்ரியங்கா சோப்ராவே ஆரத்தி எடுத்திருக்கிறார் எனறால் பார்த்துக் கொள்ளுங்கள்.
 
இந்தி சினிமாவில் சல்மான் கானின் பிரேம் ரத்தன் தான் பயோ படத்துக்குப் பிறகு வெளியாகும் பிரமாண்ட படம் இது என்பதால் அனைவரும் படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். 
 
படம் 200 கோடியை எட்டினால்தான் வெற்றி. அந்தளவுக்கு பிரமாண்ட பட்ஷெட்டில் தயாராகியிருக்கிறது இந்த வரலாற்று ஆவணம்.
 
சஞ்சய் லீலா பன்சாலியின் படங்கள் என்றால் எப்போதுமே கொஞ்சம் ஸ்பெஷல்.

வெப்துனியாவைப் படிக்கவும்