அனுஷ்கா சர்மா நடித்த என்ஹெச்10 படம் சென்ற வாரம் வெளியானது. வெள்ளிக்கிழமை முதல் நாளில் இப்படம் இந்தியா முழுவதும் 3.35 கோடிகளை வசூலித்தது. இரண்டாவது நாள் வசூல் சற்று அதிகரித்தது, 4.50 கோடிகள். ஞாயிற்றுக்கிழமை மேலும் அதிகரித்து, 5.45 கோடிகள்.
வார நாள்களில் வசூல் மிகவும் குறைந்தது. திங்கள்கிழமை 2.08 கோடிகளும், செவ்வாய்கிழமை 1.92 கோடியும் மட்டுமே வசூலித்துள்ளது. முதல் ஐந்து தினங்களில் இந்திய வசூல் 17.30 கோடிகள். வெளிநாடுகளிலும் சேர்த்து, 20.67 கோடிகள்.