அமிதாப் பச்சன் கவலை கொள்ளும் விஷயம் இதுதான்...

சனி, 24 செப்டம்பர் 2016 (10:22 IST)
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன். அனிருத்தா ராய் சவுத்ரி இயக்கத்தில் அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்டோர் நடித்துள்ள பிங்க் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் இதுவரை ரூ. 32.67 கோடி வசூல் செய்துள்ளது.


 
 
பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதையும், கொலை செய்யப்படுவதையும் மையமாக வைத்து இபபடத்தை எடுத்திருக்கிறார்கள். 3 பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள பிங்க் படத்தை பார்ப்பவர்கள் எல்லாம் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.  
 
இந்நிலையில் அமிதாப் பச்சன் படம் மற்றும் பெண்கள் பற்றி கூறுகையில், 73 வயதில் என்னுடன் வேலை செய்ய இயக்குனர்கள் விரும்புவது மகிழ்ச்சியாக உள்ளது. நாட்டில் பெண்களின் நிலையை நினைத்து கவலையாக உள்ளது. என் வீட்டு பெண்கள் யாராவது இரவில் வெளியே சென்றால் எனக்கு ஒரே கவலையாக இருக்கும். அவர்கள் செல்லும்போதே எங்கு செல்கிறார்கள் என்பதை கேட்பேன். பின்னர் அவர்கள் வீடு திரும்பும் வரை தூங்காமல் காத்திருப்பேன் என்றார்.
 
மேலும் பிங்க் படம் பார்ப்பவர்கள் பாலியல் சித்ரவதையை அனுபவித்த ஒரு பெண்ணின் துக்கத்தை உணர்வார்கள். பாலியல் குற்றங்களை குறைப்பதற்கான தூண்டுகோலாக இந்த படம் இருக்கும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்