வருடத்துக்கு ஒரு படம் என்றாலும் போதும் - அக்ஷய்குமார் காமெடி

புதன், 28 ஜனவரி 2015 (12:55 IST)
இந்தியின் முன்னணி நடிகர்கள் இரண்டு வருடத்துக்கு ஒரு படம் நடிக்கையில் வருடத்துக்கு மூன்று படம்
நடிப்பவர் அக்ஷய்குமார். சிலவேளை இந்த எண்ணிக்கை நான்காகவும் நீளும். அப்படிப்பட்டவர், வருடத்துக்கு ஒரு படம் நடித்தாலும் போதும், படம் என்னுடைய ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும் என்பதே என்னுடைய முதல் குறிக்கோள் என்று கூறியுள்ளார்.
 
அக்ஷய்க்கு என்னாச்சு என்று குழம்ப வேண்டாம். 
 
நீரஜ் பாண்டே இயக்கத்தில் அக்ஷய் நடித்த பேபி படம் வெளியாகி நல்ல விமர்சனத்தையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. சமீபத்தில் அக்ஷய் நடித்த கதை உள்ள படம் என்றால் அது இதுதான். அந்த ஹேங்ஓவரில் அவர் அறியாமல் உதிர்த்த வார்த்தைகள்தான், வருடத்துக்கு ஒரு படம்னாலும் போதும்.
 
ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். ஹேங்ஓவர் தெளியும் போது அனைத்தும் சரியாகிவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்