ஐஸ்வர்யா ராயின் ரீஎன்ட்ரி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வியாழன், 26 மார்ச் 2015 (10:09 IST)
ஐஸ்வர்யா ராய் பச்சான் குழந்தை பிறந்த பிறகு  சில வருடங்கள் நடிக்கவில்லை. உடல் எடையை குறைத்து அவர் நடிக்க ஒப்புக் கொண்ட முதல் படம், ஜாஸ்பா. 
 

 
சஞ்சய் குப்தா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய் வழக்கறிஞராகவும், இர்ஃபான் கான் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரராகவும், ஷபனா ஆஸ்மி புரபஸராகவும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர, அபிமன்யு சிங், அதுல் குல்கர்னி போன்றவர்களும் இருக்கிறார்கள்.
 
இந்த வருடத்தின் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றான ஜாஸ்பாவை அக்டோபர் ஒன்பதாம் தேதி வெள்ளிக்கிழமை வெளியிடுவது என்று முடிவு செய்துள்ளனர். 
 
ஜாஸ்பா ஒரு த்ரில்லர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்