நிர்வாணமாக ரயில் தண்டவாளத்தில் அமீர்கான் - பிகே பயங்கரம்

வெள்ளி, 1 ஆகஸ்ட் 2014 (15:18 IST)
தூம் 3-க்குப் பிறகு அமீர்கான் நடித்து வரும் படம் பிகே. ராஜ்குமார் ஹிரானி இயக்கும் இந்தப் படத்தைக் குறித்து ஆரம்பம் முதலே சர்ச்சையான கருத்துகள் நிலவுகின்றன. இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.
இன்று காலை பத்திரிகை பார்த்தவர்களுக்கு ஒரு பயங்கர அனுபவம் ஏற்பட்டிருக்கும். பத்திரிகையின் முழுப்பக்கத்தில் நிர்வாணமாக ரயில்வே தண்டவாளத்தில் நிற்கும் அமீர் கானின் படம். ஒரு சின்ன டேப்ரிக்கார்டர் அமீர்கானின் அந்தரங்கத்தை மறைத்து பயங்கரத்தின் கடுமையை குறைத்திருந்தது. அமீர் கானின் இந்த அதிர்ச்சி போஸ் பிகே படத்திற்காக.
 
இப்படியொரு நிர்வாண போஸ் தேவைதானா? அதுவும் படத்தின் பர்ஸ்ட் லுக்கில்?
 
இதற்கு வழக்கமான வியாக்கியானங்களை சொல்கிறது படக்குழு. படத்தைப் பார்த்தீங்கன்னா ஏன் இந்த நிர்வாண போஸுங்கிறதுக்கான காரணம் தெரியும் என்கிறார்கள்.
 
படத்தில்தான் காரணம் தெரியும் என்றால் அதை படத்தோடு வைத்துக் கொள்ள வேண்டியதுதானே. இப்படி பட விளம்பரத்தில் பயமுறுத்த வேண்டுமா?

வெப்துனியாவைப் படிக்கவும்