ஆறு நாளில் 74.88 கோடி - அடித்து கிளப்பும் அக்ஷய் படம்

வியாழன், 9 ஜூன் 2016 (18:11 IST)
இந்தியின் வெற்றிகரமான சீரிஸ்களில் ஒன்று ஹவுஸ்ஃபுல். அக்ஷய் குமார் நடித்த ஹவுஸ்ஃபுல் 1, 2 இரண்டும் ஹிட். இப்போது மூன்றாவது பாகம் வெளியாகி அதுவும் ஹிட்டாகியுள்ளது.


 


இந்தியாவில் முதல் 6 தினங்களில் 74-88 கோடிகளை படம் வசூலித்துள்ளது. 
 
முதலிரு பாகங்கள் மலையாள, தமிழ்ப் படங்களின் ரீமேக். ஒன்று மலையாள, மாட்டுப்பட்டி மச்சான், இன்னொன்று கமலின் காதலா காதலா. இந்த மூன்றாவது பாகம் எந்தப் படத்தின் ரீமேக்கும் இல்லை. நேரடி கதை.
 
ஹவுஸ்ஃபுல் மூன்றாவது பாகத்தின் கதையை எழுதியவர் ஒரு தமிழர். கே.சுபாஷ். கேட்ட பெயராக இருக்கிறதா? 
 
சத்ரியன் உள்பட ஏராளமான தமிழ்ப் படங்களை இயக்கியவர். இந்தியிலும் இரண்டு படங்கள் இயக்கியிருக்கிறார். சென்னை எக்ஸ்பிரஸ், என்டர்டெய்ன்மெண்ட் போன்ற படங்களின் கதையும் இவர்தான்.
 
முதலிரு பாகங்களைவிட மூன்றாவது பாகத்தில் காமெடி அதிகம் என்று ரசிகர் கூட்டம் கொண்டாடுகிறது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்